/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம்
/
'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம்
'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம்
'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு புரதச்சத்து உணவு வழங்கும் திட்டம்
ADDED : ஜூன் 18, 2025 11:57 PM
சென்னை,அரசு மருத்துவமனைகளில், 'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுவோருக்கு, சிறப்பு புரதச்சத்து மிக்க உணவு வழங்கும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழக பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட, 118 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு, புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் திட்ட அறிவிப்பு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்கும் முன், தமிழகத்தில், 985 டயாலிசிஸ் யூனிட்கள் இருந்த நிலையில், நான்காண்டுகளில், 302 புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தற்போது, 139 அரசு மருத்துவமனைகளில், 1,287 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காப்பீடு திட்டத்தின் வாயிலாக, தினமும் 9,180 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
சிகிச்சைக்கு பின், அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சோர்வடைகின்றனர். அதை போக்க, அவர்களுக்கு 100 மி.லி., பால்., 2 முட்டை, கருப்பு, வெள்ளை சுண்டல், 20 கிராம் பிஸ்கட், 27 கிராம் புரதம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் தமிழகம் முழுதும் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாரான், மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.