/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால்வாய் மீது கட்டிய கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
/
வடிகால்வாய் மீது கட்டிய கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
வடிகால்வாய் மீது கட்டிய கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
வடிகால்வாய் மீது கட்டிய கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல்
ADDED : டிச 16, 2025 06:53 AM

திருவான்மியூர்: வடிகால்வாய் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டிய விநாயகர் கோவிலை இடிக்க, எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பகுதி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாறு மண்டலம், திருவான்மியூர், சிவகாமி புரம் 1 மற்றும் 2வது குறுக்கு தெரு சந்திப்பில், ஒரு விநாயகர் கோவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கோவிலை புதுப்பிக்கும்போது, வடிகால் மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பகுதிவாசிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று கோவிலை இடித்து, வடிகால், சாலையை மீட்டெடுக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஒத்துழையுங்கள். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும்' என கூறினர். இதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பேசியதை எடுத்து, 'மாநகராட்சி உயர் அதிகாரியுடன் கலந்து பேச அனுமதிக்க வேண்டும்' என போராட்டக்காரர்கள் கூறினர். இதை ஏற்று இடிக்கும் பணியை தற்காலிகமாக அதிகாரிகள் நிறுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

