/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில், வீடுகள் இடிக்க அரும்பாக்கத்தில் எதிர்ப்பு
/
கோவில், வீடுகள் இடிக்க அரும்பாக்கத்தில் எதிர்ப்பு
ADDED : ஜன 24, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கம், வத்தலகுண்டு, ஆறுமுகம் நகர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், விநாயகர் மற்றும் அம்மன் கோவில்களுடன் நான்கு வீடுகள் உள்ளன.
இந்த நிலம் தொடர்பான வழக்கு, 20 ஆண்டுகளுக்கு மேல், நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.
தீர்ப்பு வந்ததையடுத்து, அரும்பாக்கம் போலீசார் நேற்று காலை நீதிமன்ற உத்தரவின்படி, கோவில்களையும், வீட்டையும் அகற்ற முயன்றனர். இதனால், போலீசாருக்கும், குடியிருப்போருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரியதால், இடிக்கும் பணி கைவிடப்பட்டது.

