/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், ஸ்விகி, பிக் பாஸ்கெட், பிலிங்கிட், அமேசான், டி - மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு, அதிக தள்ளுபடி விலையில் சப்ளை செய்து, பாரம்பரிய மளிகை வணிகர்களை முதுகில் குத்தும், மத்திய அரசை கண்டித்து, தாம்பரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தாம்பரம் நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், குப்பன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

