/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கரூரில் குறைதீர் கூட்டம் கோரி போராட்டம்
/
கரூரில் குறைதீர் கூட்டம் கோரி போராட்டம்
ADDED : பிப் 13, 2025 12:35 AM

சென்னை, கரூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் குறை தீர் கூட்டம் நடத்தக்கோரி, மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மெரினாவில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, இயக்கத்தின் தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், நலத்திட்டங்கள் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறை தீர் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது. அத்துறை கமிஷனர் லட்சுமி பேச்சு நடத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

