/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வூதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்/
/
ஓய்வூதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்/
ADDED : நவ 19, 2025 04:21 AM

* மாதம் தோறும், 1,000 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு இ.பி.எப்., பென்ஷனர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள்.
------------------------
சென்னை, நவ. 19-
தமிழ்நாடு இ.பி.எப்., பென்ஷனர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, 36 லட்சம் பென்ஷனர்கள், 1000 ரூபாய்க்கு கீழ் பென்ஷன் பெறுவதால் அவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து தமிழக கவர்னர் வாயிலாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
------------
மாதம் தோறும், 1,000 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு இ.பி.எப்., பென்ஷனர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்கள்.

