/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 நாளாக குடிநீருக்கு அவதி கொருக்குப்பேட்டையில் மறியல்
/
10 நாளாக குடிநீருக்கு அவதி கொருக்குப்பேட்டையில் மறியல்
10 நாளாக குடிநீருக்கு அவதி கொருக்குப்பேட்டையில் மறியல்
10 நாளாக குடிநீருக்கு அவதி கொருக்குப்பேட்டையில் மறியல்
ADDED : ஆக 21, 2025 10:43 AM
கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
மேலும், இப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தால், குடிநீர் லாரி உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது; பகுதிமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
இது குறித்து, பலமுறை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள் 40க்கும் மேற்பட்டோர், கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகே, நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.