ADDED : ஜன 08, 2025 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ., இளைஞர் அணி தலைவர் ரமேஷ் தலைமையில் கட்சியினர், 'யார் அந்த சார்' என்ற பதாகைகளுடன் காமராஜர் சாலையில் இருந்து பேரணியாக சென்று, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே வைத்து, அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

