/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - மாடுகளை கட்டி பராமரிக்க கட்டுமான பணி துவக்கம்
/
பொது - மாடுகளை கட்டி பராமரிக்க கட்டுமான பணி துவக்கம்
பொது - மாடுகளை கட்டி பராமரிக்க கட்டுமான பணி துவக்கம்
பொது - மாடுகளை கட்டி பராமரிக்க கட்டுமான பணி துவக்கம்
ADDED : ஆக 22, 2025 12:33 AM
ஈஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கத்தில் 2.50 கோடி ரூபாயில், மாடுகளை கட்டி பராமரிக்கும் இடத்திற்கான கட்டுமான பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, ஈஞ்சம்பாக்கத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில், மாடுகளை கட்டி பராமரிக்கும் இடமான கோசாலை மற்றும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.
மாடுகளை கட்டி பராமரிக்கும் இடம் அமைக்க 2.50 கோடி ரூபாய், விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் கட்ட, 2.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், மாடுகளை பராமரிக்கும் இடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இங்கு 110 மாடுகள் ஓய்வு எடுக்கும் வகையிலும், உணவு, தண்ணீர் தொட்டி மற்றும் கழிவுகள் வெளியேற்ற தனிப்பாதை போன்ற வசதிகளுடன் கட்டமைக்கப்படுகிறது.
மூன்று மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் கூறினர். விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையம் கட்டும் பணியும் விரைவில் துவங்கும் எனவும் அவர்கள் கூறினர்.