/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
போதையில் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஆக 14, 2025 11:51 PM
சென்னை :மது போதையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த கட்டுமான தொழிலாளியை, தேனாம்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மொபைல்போனில் தொடர்பு கொண்ட நபர், மது போதையில் பேசி உள்ளார்.
அவர், தன் நண்பருக்கு கட்டடம் கட்டி தந்ததாகவும், அதற்கான பணத்தை தராமல் அவர் அலைக்கழித்து வருவதாகவும், இதுசம்பந்தமாக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், அவர் தனக்கு உதவவில்லை என்றால், அவ்வளவு தான் எனவும் மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, அழைப்பு வந்த மொபைல் எண்ணை வைத்து, தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டம், மெய்யூரைச் சேர்ந்த கணேசன், 45, என்பதும் கட்டுமான தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து மெய்யூர் சென்ற போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.