/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது கொடுக்கல் வாங்கல் தகராறில் அடிதடி
/
பொது கொடுக்கல் வாங்கல் தகராறில் அடிதடி
ADDED : மே 29, 2025 12:37 AM
சென்னை,நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ், 19, மனோஜ், 22. இருவருக்கும் இடையே, கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது.
மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் என நான்கு பேர், பேசுவதற்கு ஆகாஷை நேற்று அழைத்துள்ளனர். அப்போது மனோஜ் தரப்பு, ஆகாஷை அடித்து பைக்கில் வானகரம் நோக்கி அழைத்து சென்றனர்.
அங்கு காத்திருந்த ஆகாஷின் நண்பர்கள், மனோஜ் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆகாஷ் மற்றும் மனோஜ் இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து, ஆகாஷ் நொளம்பூர் போலீசிலும், மனோஜ் வானகரம் போலீசிலும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இருதரப்பு புகார் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.