ADDED : பிப் 04, 2025 12:36 AM

சென்னை,
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, புறநகர் கோவில்களில் நேற்று பொது விருந்து நடந்தது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
வடபழனி முருகன் கோவிலில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பங்கேற்றார்.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலில், அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.
பாம்பன் சுவாமி கோவிலில், அமைச்சர் அன்பரசன், சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வில்லிவாக்கம், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன், அமைந்தகரை, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு பரிமாறினர். ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.
சென்னையில், 28 கோவில்களில் பொது விருந்து நடந்தன.
இந்நிகழ்ச்சிகளில், அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்தரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.