sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பனையூரில் வாலிபர்கள் 'பைக் ரேஸ்'; சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

/

 பனையூரில் வாலிபர்கள் 'பைக் ரேஸ்'; சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

 பனையூரில் வாலிபர்கள் 'பைக் ரேஸ்'; சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

 பனையூரில் வாலிபர்கள் 'பைக் ரேஸ்'; சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலி: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

1


UPDATED : மார் 16, 2026 09:49 AM

ADDED : மார் 16, 2026 05:36 AM

Google News

UPDATED : மார் 16, 2026 09:49 AM ADDED : மார் 16, 2026 05:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார்: பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் ஏற்படுத்திய விபத்தில், மூதாட்டி பலியானதையடுத்து, பனையூர் இ.சி.ஆர்., சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பனையூர், ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் மல்லிகா, 60. வீட்டு வேலை செய்து வந்தார். நேற்று காலை, வேலைக்கு செல்ல பனையூர் இ.சி.ஆர்., சாலையை நடந்து கடக்க முயன்றார்.

அப்போது, கோவளத்தில் இருந்து சென்னை நோக்கி, அதிவேகமாக சென்ற டி.வி.எஸ்., ரைடர் இருசக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே மல்லிகா பலியானார்.

பைக் ரேஸ் ஒட்டி வந்த இருவரும், வாகனத்தை நிறுத்தாமல் தப்பி சென்றனர்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, தப்பி சென்ற நபர்களை தேடுகின்றனர்.

இச்சம்பவத்தால், பகுதிமக்கள் பனை யூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கானத்துார் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைய செய்தனர். இதனால், இ.சி.ஆரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பகுதி மக்கள் கூறிய தாவது:

குறுகிய சாலையான தால், பனையூரில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. பைக் ரேசில் ஈடுபடுவோரால் தான், அதிக விபத்துகள் நடக்கின்றன.

அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசாரிடம் பலமுறை மனு அளித்து உள்ளோம்.

இதுவரை நட வடிக்கை எடுக்கப் படவில்லை. விபத்து பகுதிகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டிய போலீசார், மறைவான பகுதியில் நின்று, வாகனங்களை மடக்கு வதில் குறியாக இருக்கின்றனர்.

வேக கட்டுப்பாடு தடுப்பு அமைத்து, பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us