/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
/
சாலையில் பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி, நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண்; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 10ம் தேதி மாலை பணி முடிந்து, வடபழனி 100 அடி சாலை வழியாக தோழியுடன் நடந்து சென்றார்.
அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர், அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டார். இது குறித்து அப்பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், கே.கே.நகரைச் சேர்ந்த கிஷோர்குமார், 32, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.