/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடில் காமாட்சி அம்மனுக்கு தங்க தேர் இழுத்து அ.தி.மு.க.,வினர் வழிபாடு

ADDED : பிப் 25, 2026 06:30 AM

குன்றத்துார்: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தங்க தேர் இழுத்து அ.தி.மு.க.,வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், மாங்காடு நகராட்சி அ.தி.மு.க., செயலர் எம்.பிரேம்சேகர் தலைமையில், நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில், அ.தி .மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சோமசுந்தரம், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வாலாஜாபாத் கணேசன், மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணை செயலர் எஸ்.எம்.சுந்தர்ராஜன், குன்றத்துார் மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலர் பரத்ராஜ் உள்ளிட்ட பலர், தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாங்காடில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில், 500 பெண்களுக்கு புடவை, 10 நபர்களுக்கு தைய ல் இயந்திரம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம், பொதுமக்களுக்கு சமையல் பாத்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.