/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசன வாயில் கஞ்சா கடத்திய புழல் கைதி
/
ஆசன வாயில் கஞ்சா கடத்திய புழல் கைதி
ADDED : அக் 30, 2024 07:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:சோழிங்கநல்லுாரை சேர்ந்த முகமது உசேன், 25 என்பவர், வழிப்பறி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், வழக்கு தொடர்பாக சோழிங்கநல்லுார் நீதிமன்றத்தில் ஆஜராகி, திரும்பினார்.
சிறையில் முகமது உசேனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள், அவரை பரிசோதித்தனர். அப்போது, அவரது ஆசன வாயில் கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து புழல் காவல்நிலையத்தில் தரப்பட்ட புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்