/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் புழல் வாலிபர் சிக்கினார்
/
ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் புழல் வாலிபர் சிக்கினார்
ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் புழல் வாலிபர் சிக்கினார்
ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் புழல் வாலிபர் சிக்கினார்
ADDED : டிச 16, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல் காவாங்கரை அருகே கஞ்சா புழக்கம் இருப்பதாக, புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, காவாங்கரை, பாரதிதாசன் தெருவில் வசிக்கும் விஜயகுமார், 34, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அவரது வீட்டில் சோதனையிட்ட போது, 2 லட்சம்ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்டது.
இது குறித்து, புழல் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து, விஜயகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.