/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்., மிஷின் உடைக்க முயன்றவரிடம் விசாரணை
/
ஏ.டி.எம்., மிஷின் உடைக்க முயன்றவரிடம் விசாரணை
ADDED : டிச 12, 2024 12:33 AM
கொடுங்கையூர், கொடுங்கையூர், மீனாம்பாள் சாலை - சிட்கோ பிரதான சாலை சந்திப்பில், எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
நேற்று அதிகாலை, அவ்வழியே காரில் சென்ற ஹரி என்பவர், ஏ.டி.எம்., மையத்தை மர்ம நபர் ஒருவர் உடைப்பதை கண்டு, கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ரோந்து பணியில் இருந்த முதல்நிலை போலீஸ்காரர் விஜயராஜ், அந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர் முரண்பாடாக பதிலளித்துள்ளார்.
பின்னர், அவருடைய சகோதரர் சாந்தகுமார் என்பவரிடம் விசாரித்தபோது, பிடிபட்ட நபர், கொடுங்கையூர், கண்ணதாசன் நகரைச் சேர்ந்த ஜெய பாலாஜி, 40, என்பது தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
ஏமாறிய திருடன்
அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்., புரத்தில், 'லென்ஸ் கார்ட்' எனும் கண்ணாடி கடை செயல்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை, ஊழியர்கள் கடை திறக்க வந்தபோது, பூட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12:30 மணியளவில், 'டியோ' ஸ்கூட்டரில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த நபர் ஒருவர், கடப்பாரை யால் கடையின் பூட்டை உடைக்க முற்படுகிறார்.
முடியாததால், ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி செல்வது பதிவாகியுள்ளது. இது குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாரிடம் விசாரிக்கின்றனர்.