/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூரில் 'ரேஸ்' 2 சொகுசு பைக் பறிமுதல்
/
திருநின்றவூரில் 'ரேஸ்' 2 சொகுசு பைக் பறிமுதல்
ADDED : பிப் 13, 2025 12:16 AM

ஆவடி, திருநின்றவூர், சி.டி.எச்., சாலையில், கடந்த 2ம் தேதி காலை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 'யமஹா ஆர்.ஒன் 5' சொகுசு இருசக்கர வாகனத்தில் சிலர் அதிவேகமாக சென்றனர்.
இதையறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில், மூன்று இருசக்கர வாகனங்களில் நான்கு பேர் அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார், பைக் சாகசத்தில் ஈடுபட்ட திருநின்றவூர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கதிரேசன், 24, என்பவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

