/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜனாதிபதி பதக்கத்திற்கு ரயில்வே டி.ஐ.ஜி., தேர்வு
/
ஜனாதிபதி பதக்கத்திற்கு ரயில்வே டி.ஐ.ஜி., தேர்வு
ADDED : ஜன 28, 2025 12:22 AM

சென்னை, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., இப்ராஹிம் ெஷரீப், ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நாடு முழுதும் ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றி வருவோரில் 15 பேர், ஜனாதிபதி பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தெற்கு ரயில்வேயில், ரயில்வே பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., இப்ராஹிம் செரீப், இந்த பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ரயில்வேயில் பல்வேறு மண்டலங்களில், 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
நாக்பூர் உள்ளிட்ட ரயில் கோட்டங்களில், மாவோயிஸ்ட்களுக்கு எதிராகவும், பயணியருக்கு எதிரான குற்றங்களை தடுத்து, ரயில்கள் பாதுகாப்பாக இயக்க, இவரது பங்களிப்பு முக்கியம்.
கடந்த ஆண்டு ஏப்., 12 முதல் தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். ஜனாதிபதி பதக்கம், வரும் செப்டம்பரில், மத்திய ரயில்வே அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது.

