/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆர்., மேம்பால பாதையில் ரயில் தண்டவாள பணி துவக்கம்
/
ஓ.எம்.ஆர்., மேம்பால பாதையில் ரயில் தண்டவாள பணி துவக்கம்
ஓ.எம்.ஆர்., மேம்பால பாதையில் ரயில் தண்டவாள பணி துவக்கம்
ஓ.எம்.ஆர்., மேம்பால பாதையில் ரயில் தண்டவாள பணி துவக்கம்
ADDED : பிப் 04, 2026 06:07 AM

சென்னை: மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் தடத்தில், ஓ.எம்.ஆர்., சாலை பகுதி மேம்பால பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 119 கி.மீ., துாரம் பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், ஓ.எம்.ஆர்., சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் முடிந்துள்ளன. மேம்பால பாதையில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோவில், மேம்பாலம் பாதைக்கான பணிகள் தாமதமின்றி நடக்கின்றன. மாதவரம் - சிறுசேரி தடத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதைகளில், ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளோம்.
குறிப்பாக, காரப்பாக்கம், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில், தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இந்த பகுதிகளில், சாலைகளை விரிவாக்கம் செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடத்தில், இந்தாண்டு இறுதி முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

