/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்
/
வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்
வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்
வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் வடிகால் பணி நிறுத்தம்
ADDED : பிப் 21, 2025 12:19 AM

வடபழனி: வடபழனி முதல் அரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் உள்ள வடிகால், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இது, 3 அடி அகலத்தில் உள்ளது.
வடிகால் சிறியதாக இருப்பதால், ஒவ்வொரு மழைக்கும் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பழைய வடிகாலை இடித்து 5.5 அடி அகலத்திற்கு புது மழைநீர் வடிகால் கட்ட, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.
அதன்படி, வடபழனி மேம்பாலம் இறங்கும் பகுதியில் இருந்து 550 மீட்டர் துார பழைய மழைநீர் வடிகாலை இடித்து, 3 கோடி ரூபாய் செலவில் புதிய வடிகால் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், வடபழனி 100 அடி சாலையில் உள்ள மழைநீர் வடிகால், பல இடங்களில் இணைக்கப்படாமல் இருந்தன.
இதில் விடுபட்ட 1.7 கி.மீ., துாரத்திற்கு, 11 கோடி ரூபாயில் வடிகால் அமைக்கும் பணி, 2023ல் துவங்கப்பட்டது.
வடபழனி 100 அடி சாலை அழகிரி தெரு முதல் அரும்பாக்கம் வரை, வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. 250 மீட்டர் துார பணி மீதமுள்ள நிலையில், அவ்வழியாக குடிநீர் குழாய் செல்வதால், வடிகாலுக்கு பள்ளம் தோண்ட முடியாமல், தற்போது பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
குடிநீர் வாரியம் சார்பில், குழாயை மாற்றி அமைத்த பின், வடிகால் பணியை தொடர, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

