/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜன் கண் மருத்துவமனை 30வது ஆண்டு விழா
/
ராஜன் கண் மருத்துவமனை 30வது ஆண்டு விழா
ADDED : ஜூன் 22, 2025 12:20 AM
சென்னை : சென்னை ராஜன் கண் மருத்துவமனை 1995ல் துவக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற மறைந்த என்.ராஜன், இம்மருத்துவமனையை துவக்கினார்.
இம்மருத்துவமனையின், 30வது ஆண்டு விழா மற்றும் ராஜனின் 100வது பிறந்த நாள், சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கண் மருத்துவ நிபுணர்கள், சிறந்த விளங்கிய கண் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இது குறித்து, மருத்துவமனையின் தலைவர் மோகன் ராஜன் பேசியதாவது:
இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 96 சதவீதம் பேர், கண்ணாடி இல்லாமல், மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அதேபோல், வாகனங்களையும் ஓட்டுகின்றனர்.
எனது தந்தை சேவை செய்வதற்காகவே மருத்துவமனையை துவக்கினார். தற்போது, தினமும் 20க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மருத்துவமனையில் வருகின்றனர். அவர்களில், 35 சதவீதம் பேருக்கு சேவை மனப்பான்மையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி, மூன்றில் ஒரு பங்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம்.
மறைந்த முதல்வர் கருணாநிதி, கண்ணொளி காப்போம் திட்டம் துவங்கும்போது, அவற்றில் தலைமை மருத்துவராக எனது தந்தையான ராஜன் பணியாற்றினார். இத்திட்டம் இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அகில இந்திய கண் மருத்துவ சங்க தலைவர் பார்தா பிஸ்வாஸ், சிங்கப்பூர் கேம்டன் மருத்துவமனை இயக்குனர் ரொனால்யோ, ஆஸ்திரேலியா மூத்த கருவிழி மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் ரசிக் வாஜ்பாய், உமா கண் மருத்துவமனை இயக்குனர் அருள்மொழி வர்மன், ராஜன் கண் மருத்துவமனை செயல் மருத்துவ இயக்குனர் சுஜதா மோகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.