/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜரத்தினம் மைதானம் ரூ.16.67 கோடியில் மேம்பாடு
/
ராஜரத்தினம் மைதானம் ரூ.16.67 கோடியில் மேம்பாடு
ADDED : அக் 09, 2025 02:27 AM

சென்னை, சென்னை காவல் துறையின் பராமரிப்பில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், அத்துறை சார்ந்த நிகழ்வுகள் அவ்வப்போது நடத்தப்படும்.
அதற்காக தற்காலிக மேடை அமைக்க 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. வீண் செலவை தவிர்க்கவும், போதுமான வசதிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மைதானத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த 16.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1.47 கோடி ரூபாய் செலவில் மேடை மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 15.20 கோடி ரூபாய் செலவில் செயற்கை ரப்பர் ஓடுபாதை, 400 மீட்டருக்கு அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நேரு மைதானத்தில் மட்டுமே செயற்கை ரப்பர் ஓடுபாதை உள்ளது. அதையடுத்து இங்கு தான் அமைக்கப்படுகிறது. இப்பணி முடிந்ததும், இதில் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.