/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் படுமந்தம்
/
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் படுமந்தம்
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் படுமந்தம்
அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைப்பு பணிகள் படுமந்தம்
ADDED : அக் 09, 2025 02:26 AM

வளசரவாக்கம், வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கும் பணி ஓராண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதை ஒட்டி, 1.87 ஏக்கர் பரப்பில் கோவில் குளம் உள்ளது.
குளத்திற்கு போதிய வரத்து கால்வாய் இல்லாததால் வறண்டு காணப்பட்டது. இது தொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இதன் எதிரொலியாக, 87 லட்சம் ரூபாய் செலவில், குளத்தை துார் வாரி, கரை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.
ஒப்பந்தப்படி இப்பணிகள், 2021 செப்., 30ல் முடிந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால், குளத்தை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன.
பின், அறநிலையத் துறை சார்பில், குளத்தை 2.99 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க, 2024, பிப்., மாதம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதையடுத்து துவங்கப்பட்ட குளம் சீரமைப்பு பணிகள், ஓராண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. குளம் துார்வாரப்பட்ட நிலையில், கரை அமைக்கும் பணி, சுற்றுச்சுவர் கட்டும் பணி மந்தகதியில் நடக்கிறது. பூந்தோட்டம், நடைபாதை மற்றும் மின்விளக்குள் உள்ளிட்ட பணிகள் இன்னும் துவங்கவே இல்லை. எனவே, கோவில் குளம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.