/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜஸ்தான் கார் திருடனிடம் போலீசார் விசாரணை
/
ராஜஸ்தான் கார் திருடனிடம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 21, 2025 01:14 AM
திருமங்கலம், திருமங்கலத்தில் கார் திருடி சிறையில் அடைக்கப்பட்ட ராஜஸ்தான் திருடனை, ஏழு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
அண்ணா நகர் கதிரவன் காலனியைச் சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம், 53. இவரது சொகுசு கார், இரு மாதங்களுக்கு முன் திருடு போனது. திருமங்கலம் போலீசார் விசாரித்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத், 43, என்பவரை கைது செய்து, ஒரு மாதத்திற்கு முன், சிறையில் அடைத்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சொகுசு கார்களை திருடி விற்றது தெரிந்தது. இதையடுத்து திருமங்கலத்தில் திருடிய காரைக் குறித்து விசாரிப்பதற்காக போலீசார், கடந்த 13ம் தேதி புழல் சிறையில் இருந்து காவல் விசாரணைக்கு எடுத்தனர்.
அவரை ராஜஸ்தான் முழுதும் அழைத்து சென்று விசாரித்த போதும் திருடப்பட்ட காரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து நேற்று, விசாரணைக்கு பின் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.