/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி
/
பணியில் தவறி விழுந்த ராஜஸ்தான் வாலிபர் பலி
ADDED : ஜன 06, 2026 05:56 AM
தாம்பரம்: ரயில்வே கார் ஷெட்டில் இருந்து தவறி விழுந்த ராஜஸ்தான் மாநில வாலிபர் உயிரிழந்தார்.
தாம்பரத்தில், மின்சார ரயில் கார் ஷெட்டின் மேல், 50 அடி உயரத்தில், 'சோலார் பவர் பேனல்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த போது, தர்மேந்திரா, 34, என்ற நபர், தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா, சிகிச்சை பலனின்றி இறந்தார். சோலார் பவர் பேனல் அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

