sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ராஜிவ் காந்தி ஜி.ஹெச்.,சில் சிறுவனை கொல்ல முயற்சி?

/

 ராஜிவ் காந்தி ஜி.ஹெச்.,சில் சிறுவனை கொல்ல முயற்சி?

 ராஜிவ் காந்தி ஜி.ஹெச்.,சில் சிறுவனை கொல்ல முயற்சி?

 ராஜிவ் காந்தி ஜி.ஹெச்.,சில் சிறுவனை கொல்ல முயற்சி?


ADDED : ஜன 14, 2026 06:14 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிளஸ் 2 படித்து வரும் ஜோதியின் 16 வயது மகன், கடந்த 7ம் தேதி வீட்டருகே உள்ள கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் சிறுவனை பூச்சி கொல்லி மருந்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய சிறுவன், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் தாய் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'உயிருக்கு போராடி வரும் என் மகனை, மர்ம நபர்கள் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்; போலீசார் கைது செய்யவில்லை.

'தற்போது, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கொலை செய்ய முயற்சி நடப்பது பற்றி புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரை வாபஸ் பெற வேண்டும்' என, போலீசார் மிரட்டுவதாக கண்ணீர் மல் க கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us