/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 15ல் துவக்கம்
/
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 15ல் துவக்கம்
ADDED : அக் 09, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., சார்பில், 2025 - 26ம் ஆண்டு, ஆண்களுக்கான ரஞ்சி கோப்பைக்கான தேசிய கிரிக்கெட் போட்டி, கோவை, பீளமேட்டில் உள்ள ராமகிருஷ்ணா கல்லுாரியில், வரும் 15ல் நடக்க உள்ளது.
தமிழக அணியின் புதிய கேப்டனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் பால், இந்திரஜித், ஷாரூக்கான், விமல் குமார், சச்சின், ஆண்ட்ரே சித்தார்த், ஆம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜீப்நீத் சிங், அச்யுத், ஹெம்சுதேசன், அஜிதேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.