/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லிப்கோ'வில் கிடைக்கிறது அரிய அயோத்தி ராமர் தொகுப்பு
/
'லிப்கோ'வில் கிடைக்கிறது அரிய அயோத்தி ராமர் தொகுப்பு
'லிப்கோ'வில் கிடைக்கிறது அரிய அயோத்தி ராமர் தொகுப்பு
'லிப்கோ'வில் கிடைக்கிறது அரிய அயோத்தி ராமர் தொகுப்பு
ADDED : ஜன 20, 2024 12:42 AM

சென்னை புத்தகக்காட்சியில், 'லிப்கோ' பதிப்பக அரங்கில், அரிய அயோத்தி ராமர் பற்றிய தொகுப்பு நுால்கள் 1,499 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
அயோத்தி ராமர் கோவிலில், கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், ராம பக்தர்கள், ராமாயணம் சார்ந்த நுால்களை தேடி படித்து வருகின்றனர்.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அயோத்தி ராமர் குறித்த அரிய நுால்களை பதிப்பித்து, 1,499 ரூபாய்க்கு விற்கிறது.
இதில், ராமர் பூஜையின்போது படிக்க வேண்டிய ஸ்லோகங்களின் தொகுப்பு உள்ளது. அதில் முக்கியமாக, குழந்தைகள் ராமாயணத்தை அறியும் வகையில், 1961ல் பதிப்பிக்கப்பட்ட அரிய சித்திர ராமாயணம் மறுபதிப்பு செய்யப்பட்டு இந்த தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டம், சகலகாரிய சித்தி, நுால்களை வைத்து படிக்க வசதியாக சிக்குப்பலகை எனும் புத்தகப்பலகை, ஒன்றுக்கு ஒன்றரை அடி அளவிலான மூன்று போஸ்டர்களில் ராமாயண ஓவியக்காட்சிகள், உலகப்புகழ்பெற்ற ஓவியரான ரவிவர்மா வரைந்த ராமர் பட்டாபிஷேக ஓவியம், குழந்தைகள் விளையாடும் வகையிலான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.