/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் ரதோற்சவம்
/
பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் ரதோற்சவம்
பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் ரதோற்சவம்
பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் ரதோற்சவம்
ADDED : மார் 07, 2024 12:46 AM

சென்னை, சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மவதி தாயார் கோவிலில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம், கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த, 4ம் தேதி கருடசேவை உற்சவம் நடந்தது. நேற்று காலை ரதோற்சவம் எனும் தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு உஞ்சல் சேவை நடந்தது. இரவு 7:00 மணிக்கு பத்மாவதி தாயார் அஸ்வ வாகனத்தில் அருள்பாலித்தார்.
இன்று காலை சக்ர ஸ்நானமும் நடக்கிறது. நாளை புஷ்ப யாகம் நடக்கிறது. பிரம்மோற்சவ ஏற்பாடுககளை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.