/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அங்கன்வாடி மையத்தில் ரேஷன் கடை ரூ. 36 லட்சத்தில் பணிகள் விறுவிறு
/
அங்கன்வாடி மையத்தில் ரேஷன் கடை ரூ. 36 லட்சத்தில் பணிகள் விறுவிறு
அங்கன்வாடி மையத்தில் ரேஷன் கடை ரூ. 36 லட்சத்தில் பணிகள் விறுவிறு
அங்கன்வாடி மையத்தில் ரேஷன் கடை ரூ. 36 லட்சத்தில் பணிகள் விறுவிறு
ADDED : ஆக 14, 2025 11:45 PM

வில்லிவாக்கம் :அங்கன்வாடி மையம் இயங்கும் வளாகத்தில், 36 லட்சம் ரூபாயில் கட்டப்படும் ரேஷன் கடைகளால், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம், சிட்கோ நகர் உள்ளது. இங்கு, மூன்றாவது பிரதான சாலையில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில், குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
மைய வளாகத்தில், மாநகராட்சி சார்பில், இரண்டு ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. வளாகத்திற்குள் குழந்தைகள் விளையாட்டும் மையத்தை ஆக்கிரமித்து, ரேஷன் கடைகள் கட்டுவதாக குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் விளையாடும் இடத்தை ஆக்கிரமித்து, ரேஷன் கடை கட்டி வருகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும்' என்றனர்.
இதுகுறித்து, 94வது வார்டு கவுன்சிலர் மற்றும் மண்டல குழுத்தலைவர் ஜெயின் கூறியதாவது:
சிட்கோ நகரில் இயங்கும் நான்கு ரேஷன் கடைகளும், வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. இவற்றை சொந்த கட்டத்தில் மாற்றுவதற்காக, மாநகராட்சி இடத்தை தேர்வு செய்து, அங்கு, கவுன்சிலர் நிதியில் 36 லட்சம் ரூபாயில் பணிகள் நடக்கின்றன.
கடைகளுக்கான நுழைவாயில், வெளிப்புறத்தில் வைப்பதால், அங்கன்வாடிக்கும், ரேஷன் கடைக்கும் இடையூறு ஏற்படாது. அதேபோல், வளாகத்தில் மீதமுள்ள இடத்தில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளதால், குழந்தைகள் தராளமாக விளையாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.