/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கருக்கு சாலையில் பள்ளம்; ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரி சிக்கியது
/
கருக்கு சாலையில் பள்ளம்; ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரி சிக்கியது
கருக்கு சாலையில் பள்ளம்; ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரி சிக்கியது
கருக்கு சாலையில் பள்ளம்; ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரி சிக்கியது
UPDATED : டிச 12, 2025 08:56 AM
ADDED : டிச 12, 2025 05:28 AM

அம்பத்துார்: அம்பத்துார், கருக்கு பிரதான சாலையில் ஐந்தாவது முறையாக மீண்டும் பள்ளம் விழுந்தது. இதில், ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி சிக்கியது.
அம்பத்து ார், கருக்கு பிரதான சாலையில், மாரியம்மன் கோவில் தெரு சந்திப்பில், நேற்று பிற்பகலில் 4 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி, திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்நேரம், ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த 'அசோக் லேலண்ட்' லாரியின் முன்பக்க சக்கரம் பள்ளத்தில் சிக்கி, லேசாக சாய்ந்தது.
லாரியின் ஓட்டுநர், லாரியில் இருந்து குதித்து லேசான காய த்துடன் தப்பினர். அம்பத்துார் போலீசார் மற்றும் மண்டல அதிகாரிகள், 'கிரேன்' மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ரேஷன் பொருட்கள், அருகில் உள்ள ரேஷன் கடையில் இறக்கி வைக்கப்பட்டது.
இந்த சாலையில், ஏற்கனவே ஆக., 17, செப்., 1, அக்., 2 மற்றும் அக்., 25ம் தேதிகளில் பள்ளம் விழுந்தது குறிப்பிடத்தக்கது.