/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அனகாபுத்துாரில் ஆக்கிரமித்து கட்டிய மசூதியை அகற்ற சமரச பேச்சு
/
அனகாபுத்துாரில் ஆக்கிரமித்து கட்டிய மசூதியை அகற்ற சமரச பேச்சு
அனகாபுத்துாரில் ஆக்கிரமித்து கட்டிய மசூதியை அகற்ற சமரச பேச்சு
அனகாபுத்துாரில் ஆக்கிரமித்து கட்டிய மசூதியை அகற்ற சமரச பேச்சு
ADDED : ஜூலை 22, 2025 12:28 AM

அனகாபுத்துார், அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றின் கரை யோரம் இருந்த ஆக்கிரமிப் பு களை அகற்றிய இடத்தில் அமைந்துள்ள மசூதியை அகற்றுவது குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமரச பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனகாபுத்துாரில், டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர்., நகர் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில், ஆற்றை ஆக்கிரமித்து, 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இடித்து அகற்றும் பணி, மே 20ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடக்கிறது.
அப்பகுதியில் இருந்த, 916 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்கள் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காயிதே மில்லத் நகரில் உள்ள மசூதியை இடிக்கக்கூடாது என, இஸ்லாமிய கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜூன் 3ம் தேதி, தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டமைப்பினர், இந்த மசூதியை பார்வையிட்டனர்.
அப்போது, 'இப்பகுதி யில் உள்ள மசூதி, நாகாத்தம்மன் கோவில் உள் ளிட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்' என, கூறினர்.
இது தொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளுடன், தாம்பரம் மாநகராட்சி, நீர்வளத் துறை, காவல் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில், பக்ரீத் பண்டிகை வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை முடிந்துவிட்ட நிலையில், மசூதியை இடிக்கும் விவகாரம், அப்படியே உள்ளது .
இது குறித்து, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கூறியதாவது:
அனகாபுத்துாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில், மதரஸா, மசூதி உள்ளது. அவற்றை இடிக்கக்கூடாது என, பக்ரீத் பண்டிகை வரை கால அவகாசம் கேட்டிருந்தனர்.
தற்போது, பக்ரீத் பண்டிகை முடிந்து விட்டதால், அது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களே இடித்து அகற்ற, அவர் களிடம் பேசி வருகிறோம்.
விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். அதேபோல், அங்குள்ள கோவில்கள், வேலி போடும் பணியின் போது இடித்து அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.