/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமடைந்த நேமம் ஏரி ரூ.40 கோடியில் புனரமைப்பு
/
சேதமடைந்த நேமம் ஏரி ரூ.40 கோடியில் புனரமைப்பு
ADDED : மார் 08, 2024 12:26 PM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ளது நேமம் ஏரி. இது 0.53 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இந்த ஏரி நீரை, சென்னை குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை வாயிலாக இந்த ஏரிக்கு நீராதாரம் கிடைத்து வருகிறது. ஏரியில் தேங்கும் நீர், கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கிறது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால், நேமம் ஏரி முழுமையாக நிரம்பியது. அதில் இருந்து அதிகப்படியாக வெள்ளநீர் வெளியேறியது. இதனால், ஏரியில் உள்ள எட்டு மதகுகள் மட்டுமின்றி, கரைகளும் ஆங்காங்கே சேதம் அடைந்தது.
இந்த ஏரியை புனரமைக்க, அரசிற்கு சென்னை மண்டல நீர்வளத்துறை வாயிலாக அறிக்கை அனுப்பபட்டது. இதை ஏற்று, 40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியில், ஏரியை புனரமைப்பதற்கான பணிகளை நீர்வளத்துறை விரைந்து துவங்கவுள்ளனர். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்பதால், அதற்கு முன் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

