/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோவில் தவறவிட்ட ஐ - போன் மீட்பு
/
ஆட்டோவில் தவறவிட்ட ஐ - போன் மீட்பு
ADDED : மே 11, 2025 12:35 AM
சாஸ்திரிநகர், அடையாறு, பத்மநாப நகரைச் சேர்ந்தவர் சுபாஷினி, 40. இவர், நேற்று முன்தினம், கடைக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது, ஆட்டோவில் ஐ - போனை தவற விட்டது தெரிந்தது. உடனே, சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், சுபாஷினியில் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது, ஆட்டோவில் இருந்து மணி சத்தம் கேட்டது. ஓட்டுநரான வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரகீம், 48, போனை எடுத்து பேசினார். இதையடுத்து, போலீசாரின் வழிகாட்டுதல்படி, ஓட்டுநர் ஐ - போனை சாஸ்திரி நகர் காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு போலீசார் முன்னிலையில், சுபாஷினியிடம் ஒப்படைத்தார். சுபாஷினி போலீசாருக்கும், ஆட்டோ ஓட்டுநர் அப்துல் ரகீமுக்கும் நன்றி தெரிவித்தார்.