ADDED : அக் 30, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை, படப்பை அருகே, சாலமங்கலம் எம்.ஜி.ஆர்., தெருவில் வசிப்பவர் கவியரசன், 38; கொத்தனார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், இவரது மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார்.
தனியாக வசித்த நிலையில், கவியரசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.
பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது கவியரசன் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.