ADDED : மார் 27, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற ஊர்க்காவல் படையில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. ஒரு துணை மண்டல தளபதி, 52 ஆண் மற்றும் ஆறு பெண் ஊர்க்காவல் படை வீரர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக, ஆவடி கமிஷனரக எல்லையில் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள், 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவர்.
ஊர்க்காவல் பணியில் சேர, ஏப்., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.