/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி
/
போக்குவரத்து பிரிவுக்கு ஆள் தேடும் அதிகாரி
ADDED : ஜன 31, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த, அயல்பணி எனும் அடிப்படையில் போலீசாரை அனுப்புமாறு, அப்பிரிவு, ஐ.ஜி., மல்லிகா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
போக்குவரத்து பிரிவை வலுப்படுத்த வேண்டி உள்ளது. இதனால், அயல்பணி எனும் அடிப்படையில் சம்மதம் தெரிவிக்கும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், கான்ஸ்டபிள்களை அனுப்ப வேண்டும்.
விருப்பமுடையோர், stpccontrolroom@gmail.com எனும் இ - மெயிலுக்கு அனுப்பலாம்.