/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மலக்குடல் புற்றுநோய் மையம் அப்போலோவில் துவக்கம்
/
மலக்குடல் புற்றுநோய் மையம் அப்போலோவில் துவக்கம்
ADDED : பிப் 28, 2024 12:39 AM
சென்னை, அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், மலக்குடல் புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், அப்போலோ மருத்துவ குழுமங்களின் தலைவர் பிரதாப் சி ரெட்டி துவக்கி வைத்து கூறியதாவது:
அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், கீமோரேடியோதெரபி, புரோட்டான் தெரபி, ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களை கொண்ட சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையில், நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்க உள்ளோம். இதன் வாயிலாக, புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'மலக்குடல்' அகற்றாமல் தக்கவைக்கப்படும்.
மலக்குடல் புற்றுநோய்க்கு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கி, தனி பிரிவு துவங்குவது இந்தியாவில் முதல் முறை. ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் புற்றுநோய் சிகிச்சை தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

