தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ படப்பிடிப்பு கட்டணம் பாதியாக குறைப்பு

படப்பிடிப்பு கட்டணம் பாதியாக குறைப்பு

படப்பிடிப்பு கட்டணம் பாதியாக குறைப்பு


ADDED : ஆக 27, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ஆக. 28-–

எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு தளங்களுக்கான கட்டணம், பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர்., திரைப்பட நகரத்தில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தளங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தயாரிப்பாளர் சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில், கட்டண விகிதங்களை பாதியாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, குளிர்சாதன வசதியுடன் கூடிய முதல் பிரிவு படப்பிடிப்பு தளத்திற்கு, 12 மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியில்லாத தளத்திற்கு, 80 ஆயிரம் ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட படப்பிடிப்பு தளத்திற்கும், 60 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக கட்டணத்தை குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us