/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி கிடங்கில் வெடித்து சிதறிய 'ப்ரிஜ்'
/
பூந்தமல்லி கிடங்கில் வெடித்து சிதறிய 'ப்ரிஜ்'
ADDED : மார் 26, 2025 11:50 PM

பூந்தமல்லி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லியில் 'வெஸ்டர்ன் ரெப்ரிஜிரேஷன்' என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை கிடங்கு செயல்படுகிறது.
ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், பால் பாக்கெட்டுகள் வைக்கக்கூடிய குளிர்சாதன பெட்டிகள், இங்கிருந்து வணிக கடைகள், குடியிருப்புகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
நேற்று காலை, இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, இருப்பு வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டிகளில் பொருத்தப்பட்டிருந்த 'கம்ப்ரசர்கள்' வெடித்து சிதறி, கரும் புகை வெளியேறியது.
தகவலறிந்து, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், செங்குன்றம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்தனர். வாகனத்தில் இருந்த தண்ணீரை பீய்ச்சியடித்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும், கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன பெட்டிகள் தீயில் கருகி நாசமாகின. கிடங்கில், தொழிலாளர்கள் பணியில் இல்லாததால், யாருக்கும் பாதிப்பில்லை.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.