/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை உறவினருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 30, 2025 12:34 AM
சென்னை, மயிலாப்பூரில் பெற்றோருடன் வசிக்கும் 13 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான உறவினர், 2020, செப்., 28ல், வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என, சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.
எனினும் அச்சிறுமி, இச்சம்பவம் குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களது புகாரின்படி மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார், இந்திய தண்டனை சட்டம், 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ் வன்கொடுமை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட உறவினரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீதான குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, அவருக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும்; தமிழக அரசு இழப்பீடாக மூன்று லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.