/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை விபத்தில் காவலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்
/
சாலை விபத்தில் காவலாளி பலி உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 12, 2025 12:30 AM
பூந்தமல்லி, கார் மோதிய விபத்தில், தனியார் தொழிற்சாலை காவலாளி பலியானார்.
பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 47. இவர், தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்தார்.
சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு சாலையை கடந்தபோது, அவ்வழியே சென்ற கார், அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஏழுமலை பலியானார்.
ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஏழுமலையின் உறவினர்கள் செம்பரம்பாக்கத்தில் விபத்து நடந்த பகுதியில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
நசரத்பேட்டை 'டாஸ்மாக்' அருகே பைக்கில் வந்து ஏழுமலையை மடக்கிய போலீசார், மது அருந்தி இருந்ததாக அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, பைக் சாவியை எடுத்து சென்றனர். இதையடுத்து அவர் சாலையை கடக்க முயன்றபோது, விபத்தில் சிக்கியுள்ளார். எனவே, 'டாஸ்மாக்' கடை அருகேயே, போலீசாரால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் தான், ஏழுமலை விபத்தில் சிக்கியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தகவலறிந்து வந்த நசரத்பேட்டை போலீசார், அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.