/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
/
குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
குளத்தில் மூழ்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்
ADDED : மே 08, 2025 12:21 AM

திருவள்ளூர், திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
குன்றத்துாரை சேர்ந்தவர் ஹரிஹரன், 17. அவருடன், அம்பத்துாரை சேர்ந்த வெங்கட்ராமன், 19, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த வீரராகவன், 25 ஆகியோர், சென்னை சேலையூரில் உள்ள ஒரு வேத பாடசாலையில் வேதபாராயணம் பயின்று வருகின்றனர்.
அவர்கள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் வேதபாராயணம் செய்ய வந்திருந்தனர். நேற்று முன்தினம், கோவில் குளத்தில் சந்தியாவதனம் செய்த போது, மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என, ஸ்டாலின் அறிவித்தார்.
நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் பெற்றோர், சுதர்சனம், மணிவண்ணன் மற்றும் ரவி ஆகியோரிடம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கான காசோலையை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஹிந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.