/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி நெரிசலுக்கு தீர்வு காண கழிவுநீர் உந்து நிலையம் இடமாற்றம்?
/
வேளச்சேரி நெரிசலுக்கு தீர்வு காண கழிவுநீர் உந்து நிலையம் இடமாற்றம்?
வேளச்சேரி நெரிசலுக்கு தீர்வு காண கழிவுநீர் உந்து நிலையம் இடமாற்றம்?
வேளச்சேரி நெரிசலுக்கு தீர்வு காண கழிவுநீர் உந்து நிலையம் இடமாற்றம்?
ADDED : பிப் 23, 2024 12:43 AM

வேளச்சேரி,அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள் என வேளச்சேரி பகுதி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும், மேடவாக்கம், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதியில் இருந்து, கிண்டி நோக்கி செல்ல, வேளச்சேரி சாலைகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் இப்பகுதியில், நெரிசலை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு முன், 100 அடி அகலம், 2 கி.மீ., துாரத்தில் விரைவு சாலை அமைக்கப்பட்டது.
அதன்பின், விஜயநகர் சந்திப்பில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. எனினும், விரைவு சாலையில் நெரிசல் குறையவில்லை. இந்த சாலை, 2 கி.மீ., துாரம் வரை 100 அடி அகலமாக இல்லை.
குறிப்பாக, சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைத்த, கழிவுநீர் உந்து நிலையம் உள்ளது. இந்த இடத்தில், 30 அடி அகலமாக உள்ளது. மேம்பாலத்தில் இருந்து நெரிசல் இல்லாமல் வேகமாக வரும் வாகனங்கள், இந்த உந்து நிலையத்தில் சிக்கி கொள்கின்றன.
மேலும், உந்து நிலையத்தின் மேற்கு திசையில் உள்ள காலி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால், நெரிசல் அதிகரிக்கிறது.
கழிவுநீர் உந்து நிலையத்தை இடம் மாற்றி அமைத்து, நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குடிநீர் வாரியம் மாற்று இடம் தேடி கொடுத்தால், இடமாறுவதற்கான செலவை ஏற்க தயாராக இருக்கிறோம். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். விரைவில் தீர்வு கிடைக்கும்' என்றனர்.