/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாக்காளர் பட்டியலில் இருந்து 2 லட்சம் பேர் நீக்கம்? படிவத்தை திரும்ப தராததால் முடிவு
/
வாக்காளர் பட்டியலில் இருந்து 2 லட்சம் பேர் நீக்கம்? படிவத்தை திரும்ப தராததால் முடிவு
வாக்காளர் பட்டியலில் இருந்து 2 லட்சம் பேர் நீக்கம்? படிவத்தை திரும்ப தராததால் முடிவு
வாக்காளர் பட்டியலில் இருந்து 2 லட்சம் பேர் நீக்கம்? படிவத்தை திரும்ப தராததால் முடிவு
UPDATED : டிச 12, 2025 08:57 AM
ADDED : டிச 12, 2025 05:02 AM

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள, 40.04 லட்சம் வாக்காளர்களின் இதுவரை, 70 சதவீதமான 28 லட்சம் வாக்காளர்கள் தான், பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மற்றவர்களின் நிலை தெரியாததால், 12 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்க வாய்ப்புள்ளது என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, நவ., 4 முதல் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 40.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி வாரியாக, வாக்காளர் திருத்தம் பணிக்காக, பொறுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் என, 3,718 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், சிறப்பு திருத்த படிவங்களை, வாக்காளர்களுக்கு நேரடியாக வழங்கியதுடன், வாக்காளர் இல்லாத இடங்களில், முகவரி அடிப்படையில் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, 39.59 லட்சம் பேருக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில், 28 லட்சம் என, 70 சதவீத வாக்காளர்களிடமிருந்து, பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
நேற்றுடன் படிவங்கள் பெறுவதற்கான அவகாசம் முடிய இருந்த நிலையில், 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் 19ம் தேதி வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், சென்னையில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காமல் உள்ள, 12 லட்சம் வாக்காளர்கள் விபரங்கள் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில், தற்போதைய கணக்கின்படி மொத்த வாக்காளர்களில், 2.23 லட்சம் பேருக்கு இரட்டை ஓட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மேலும், 1.49 லட்சம் பேர், இறந்தவர்கள் என, இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு 8.39 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்துள்ளனர். பதில் அளிக்க முடியாத சூழலில், 36,979 பேர் உள்ளனர்.
மொத்த வாக்காளர் அடிப்படையில், படிவம் வழங்கப்பட்டும், 28 லட்சம் பேர் தான் பூர்த்தி செய்து தந்துள்ளனர். மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டும், மற்றவர்கள் பூர்த்தி செய்து தராதபட்சத்தில், 12 லட்சம் வாக்காளர்கள் வரை, பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

