/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமித்த கொட்டகை அகற்றம்
/
சாலையை ஆக்கிரமித்த கொட்டகை அகற்றம்
ADDED : ஜன 27, 2025 03:56 AM
செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி ஆர்ச் சந்திப்பு சாலை, 80 அடி அகலம் கொண்டது. இந்த சந்திப்பில், தி.நகர், கிண்டி, பாரிமுனை போன்ற பகுதியில் இருந்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் செல்லும் பேருந்துகள் நின்று செல்லும்.
இந்த சாலையில் வடிகால் கட்டியபின், வாகன நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆர்ச் சந்திப்பில், பேருந்து ஆட்டோ வளைந்து நிற்கும்.
விபத்துகள் நடந்ததால், 'சாலையோர கடைகள் தடைசெய்யப்பட்ட பகுதி' என, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்தது.
இதனால், சிறு வியாபாரிகள் கடை நடத்துவதில்லை. ஆனால், வெளி இடங்களில் இருந்து வணிக நிறுவனங்கள், கொட்டகை அமைத்து விளம்பரத்துடன் வியாபாரம் செய்தனர். எச்சரிக்கை பலகையையும் சேர்த்து ஆக்கிரமித்தனர். இதனால், சாலை அகலம் குறைந்து விபத்துகள் அதிகரித்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, சாலையை ஆக்கிரமித்த கொட்டகையை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இனிமேல் கொட்டகை அமைத்தால், அபராதத்துடன் போலீசில் புகார் அளிக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

