/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணிக்கான தடுப்புகள் அகற்றம் 100 அடி சாலையில் வாகன ஓட்டிகள் நிம்மதி தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும்

ADDED : ஜூன் 18, 2025 12:18 AM

திருமங்கலம், சென்னையில், மூன்று வழித்தடங்களில் 'மெட்ரோ' ரயில் திட்டப்பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. அதில், மாதவரம் பால்பண்ணை - சோழிங்கநல்லுார் வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடம் மாதவரம் துவங்கி ரெட்டேரி, பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், கோயம்பேடு, விருகம்பாக்கம், போரூர் வழியாக சோழிநல்லுார் வரை செல்கிறது.
மெட்ரோ வழித்தட பணிகளுக்காக, சாலை முழுதும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், பெரும்பாலான இடங்களில் நெரிசலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
குறிப்பாக, திருமங்கலம் - கோயம்பேடு பகுதியில், 100 அடி சாலையில் நடக்கும் பணிகளால், இருபுறங்களிலும் குறைந்தது 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சாலை முழுவதும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில் இருந்து, திருமங்கலம் பகுதியில், 'யு டர்ன்' கிடையாது. அதற்கு பதில், அண்ணா நகர் 12வது பிரதான சாலை வழியாக சென்று தான் திரும்ப வேண்டும். மேலும், திருமங்கலத்தில் இருந்து, 3 கி.மீ., சென்று, பாடி மேம்பாலத்தில் மேல் வரை சென்று தான், திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. தற்போது, சிக்னல்கள் அமைத்து, பிரதான சந்திப்புகளில் மக்கள் பயன்பாட்டிற்கு பாதை திறக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர். மெட்ரோ பணிகளை விரைவாக முடித்து, மற்ற இடங்களிலும் 'யு - டர்ன்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.