/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
பள்ளத்தில் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : ஆக 25, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு 'ஏ' சாலை இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், காவல் மையம் அருகே வடிகால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில், நேற்று முன்தினம் பெய்த மழைநீர் தேங்கி, கழிவுநீர் குட்டையாக மாறியது.
இதையறிந்த, அங்காடி நிர்வாக குழு அலுவலர்கள், வடிகால்வாய் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை, மின் மோட்டார் மூலம் பம்ப் செய்து, அருகில் உள்ள வடிகால்வாயில் நேற்று வெளியேற்றினர்.